புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 11 ஆகஸ்ட் 2021 (11:54 IST)

தொடர் அமளி: தேதி குறிப்பிடாமல் மக்களவை கூட்டத்தொடர் ஒத்திவைப்பு!!

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். 

 
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது நடைபெற்று வரும் மழை கால பாராளுமன்ற கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் பல நாட்கள் பாராளுமன்றம் நடைபெற விடாமல் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கினர். 
 
இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் நாடாளுமன்றம் 17-வது நாளாக இன்றும் முடங்கியது. இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.