திங்கட்கிழமை வரை இரு அவைகளும் ஒத்திவைப்பு!
14வது நாளிலும் அமளி தொடர்ந்ததால் வரும் திங்கட்கிழமை வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகிறார்கள். இதனால், நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமையும் அமளி நிலவுகிறது.
பெகாசஸ் உளவு செயலியைப் பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும், விவசாயிகளின் தொடர் போராட்டத்துக்குக் காரணமான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதனால் கடந்த 13 நாட்களாக இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. 14வது நாளிலும் அமளி தொடர்ந்ததால் வரும் திங்கட்கிழமை வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.