14 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு..!
மக்களவையில் 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி செய்ததை எடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்பிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
நேற்று பாராளுமன்றம் ஸ்தம்பிக்க வைக்கப்பட்ட நிலையில் 15 எம்பிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து ஒரு எம்பியின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்ட நிலையில் 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் 14 எம்பிக்கள் சஸ்பெண்டை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று போராட்டம் நடத்தியதால் மக்களவையின் மையப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
Edited by Mahendran