இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..
கர்நாடக மாநிலத்தில் பகுதிநேர வேலை தேடிக்கொண்டிருந்த அர்ச்சனா என்ற இளம்பெண் இன்ஸ்டாகிராமில், அமேசான் நிறுவனத்தில் வேலை எனக் கண்டதும் அந்த லிங்கை கிளிக் செய்தார். உடனே அவரின் வாட்ஸ்அப்பிற்கு குறுஞ்செய்தி வந்தது.
முதலில் அவரை நம்ப வைப்பதற்காக சில வேலைகளை கொடுத்தனர். பின்னர், பணம் செலுத்தினால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று அவர்கள் கூறியதை நம்பி, கொஞ்சம் கொஞ்சமாக UPI மூலம் ₹1.94 லட்சம் வரை செலுத்தினார்.
அதன் பிறகு, லாபத்தை எடுக்க முயன்றபோது, அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, சைபர் கிரைமில் புகார் அளித்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெரியாத எண்களில் இருந்து வரும் லிங்குகளை கிளிக் செய்யக்கூடாது என ஏற்கனவே காவல்துறை மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் அறிவுறுத்திய நிலையில் இது போன்று தினந்தோறும் பலர் ஏமாந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. இனிமேலாவது மூலம் வரும் நம்பகத்தன்மையற்ற லிங்குகளை கிளிக் செய்யக் கூடாது என்பதை அனைவரும் உறுதி ஏற்போம்.
Edited by Mahendran