செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2024 (12:59 IST)

“டானா?.. நானா?.. “ எப்படி இருக்கு கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ டீசர்?

ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள ன சாணிக்காயிதம் திரைப்படம் கவனத்தைப் பெற்றது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் தெலுங்கில் நல்ல வெற்றியைப் பெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.

அதன் பின்னர் தமிழில் அவர் நடித்த மாமன்னன் திரைப்படமும் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது. சில மாதங்களுக்கு முன்னர் அவர் நடித்த ‘ரகு தாத்தா’ திரைப்படம் ரிலீஸாகி கவனத்தைப் பெற்றது. பாலிவுட்டில் அவர் அறிமுகமாகும் பேபி ஜான் என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இதற்கிடையில் அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சந்துரு என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில் கீர்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷின் ஹேண்ட்பேக்கை திருடி செல்லும் திருடர்கள் அதை திறந்து பார்க்கும் போது துப்பாக்கி, கத்தி, வெடிகுண்டு ஆகியவை இருக்க அதிர்ச்சியாகின்றனர். அப்போது அங்கு வரும் கீர்த்தி சுரேஷ் அவர்களிடம் மாஸ் ஹீரோ போல பேசும் வசனங்கள் அவர் யார் என்பதையே சொல்லாமல் பல ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்டுள்ளது. நகைச்சுவை மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக ரிவால்வர் ரீட்டா இருக்கும் என்பதை இந்த டீசர் காட்டுகிறது.