ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (15:50 IST)

ரூ.675க்கு கீழே சரிந்த எல்ஐசி பங்குகள்; கலக்கத்தில் முதலீட்டாளர்கள்

lic share
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 949 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்ட எல்ஐசி பங்குகள் தற்போது 675க்கும் கீழ் வர்த்தமாகி வரும் நிலையில் முதலீட்டாளர்கள் கடும் கலக்கத்தில் உள்ளனர். 
 
பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்றும் அதிக லாபம் இல்லை என்றாலும் நஷ்டம் வர வாய்ப்பே இல்லை என்ற நம்பிக்கையில்தான் ஏராளமானோர் எல்ஐசி பங்கில் முதலீடு செய்தனர்
 
ஆனால் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலிருந்தே தொடர்ச்சியாக சரிந்து வரும் எல்.ஐ.சி பங்குகள் தற்போது 675 ரூபாய்க்கு கீழ் வழக்கமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனால் இதில் முதலீடு செய்தவர்கள் லட்சக்கணக்கான கோடியை இழந்துள்ளனர் என்பது அதிர்ச்சியான தகவல் ஆகும்