வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (16:01 IST)

எல்.ஐ.சியின் சந்தை மதிப்பு சரிவு....

lic
எல்.ஐ.சி பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு ரூ.42,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரூ.6 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டிருந்த எல்.ஐ.சியின் சந்தை மதிப்பு ரூ.5.57 லட்சம் கோடியாக சரிந்துள்ளது பங்கு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான ஆயுள் காப்பீடு நிறுவனத்தின்(LIC)  சுமார் 22 கோடி பங்குகளை விற்று 22 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு முடிவு செய்தது.

உக்ரைன் – ரஷ்யா போரால் பங்கு வெளியீடு தள்ளிப்போன நிலையில், திங்கட்கிழமை முதலீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இரு நாட்களில் மட்டும் ரூ.5, 620 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்க விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

எனவே, எல்.ஐ.சி ஐபி ஓ 8% இன்று பங்கு சந்தையில் பட்டியல் ஆனது ரூ.949 க்கு விலை நிர்ணயம் ஆன பங்கு விலை ரூ.872 வர்த்தகம் ஆகிறது.