1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Anandakumar
Last Modified: திங்கள், 16 மே 2022 (23:40 IST)

நடிகை கங்கனா ரனாவத் திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம்

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். 
 
சுவாமி தரிசனத்தை தொடர்ந்து ஆலயத்திலுள்ள ரங்கநாயகி மண்டபத்தில் தேவஸ்தான சார்பில் தீர்த்தப் பிரசாதங்களைப் அதிகாரிகள் வழங்கினர். 
 
சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் பேசிய தாவது - 
 
தான் நடித்து வெளிவரவுள்ள தாகட் (dhaakad)  திரைப்படம் வெளியாக உள்ளதை அடுத்து வெற்றி பெற வேண்டுமென ஏழுமலையான் தரிசனம் செய்தேன். ரசிகர்களாகிய உங்களுடைய ஆசீர்வாதம் எனக்கு வேண்டும்.