செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2023 (21:00 IST)

திருமணம் தாண்டிய உறவை கிரிமினல் குற்றமாக்க சட்டமா?

Love
திருமணம் தாண்டிய உறவு என்பது கிரிமினல் குற்றமாகாது என கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் திருமணம் தாண்டிய உறவை கிரிமினல் குற்றமாக்க புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் உள்ளிட்டவைகளுக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் திருமணம் தாண்டிய உறவை கிரிமினல் குற்றமாக்கும் புதிய சட்டத்திற்கு பரிந்துரை செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக திருமணம் தாண்டிய உறவு என்பது அதிகரித்து வரும் நிலையில் இது சமூக சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என்று  கூறப்பட்டு வரும் நிலையில் இந்த சட்டம் இயற்றப்படுவது மிக அவசியம் என்று பலர் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இந்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமணம் தாண்டிய உறவு என்பது கிரிமினல் குற்றமாகும் என்ற சட்டம் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Mahendran