'லியோ’ படத்தின் முதல் காட்சியில் திருமணம் செய்து கொண்ட ஜோடி.. ரசிகர்கள் வாழ்த்து..!
தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் முதல் காட்சியின்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த காதல் ஜோடி, திரையரங்கில் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இன்று காலை 9:00 மணிக்கு தமிழகம் முழுவதும் முதல் காட்சி திரையிடப்பட்டது.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் விஜய் ரசிகர் ஒருவர் தனது காதலியுடன் வந்து படம் ஆரம்பிக்கும் சில நிமிடங்களுக்கு முன் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார்.
இதனை அடுத்து அங்கு இருந்த விஜய் ரசிகர்கள் அந்த காதல் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது
Edited by Mahendran