1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2023 (12:14 IST)

பிறந்தநாளில் காதலரை அறிமுகம் செய்த அமலாபால்.. திருமணம் எப்போது?

நடிகை அமலாபால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் தனது புதிய காதலரை சமூக வலைதளத்தில் அறிமுகம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை அமலா பால் ஏற்கனவே இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று கணவரை பிரிந்து விட்டார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது நடிகை அமலாபால் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து கொண்டிருப்பதாகவும் அவரை விரைவில் அவர் திருமணம் செய்வார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் அமலா பால் தனது சமூக வலைத்தளத்தில் ரீல்ஸ் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ஜெகத் தேசாய் என்பவருடன் அமலா பால் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது

மேலும் அவர் #WeddingBells ஹேஷ்டேக்குடன் இதை பதிவு செய்துள்ளதை அடுத்து இருவரும் காதலிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது

இதனால் அமலா பால் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva