புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (12:54 IST)

”ஆபாச படம் பார்ப்பதில் ஒன்றும் தவறில்லை”: சட்டத் துறை அமைச்சர் விளக்கம்

ஆபாச படம் பார்ப்பதில் எந்த தவறும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் பாஜகவைச் சேர்ந்த லட்சுமன் சங்கப்பா எம்.எல்.ஏவாக இருந்தபோது சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டார். ஆதலால் இவரது பதவி பறிக்கப்பட்டது.

தற்போது கர்நாடகாவில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்ததை அடுத்து எடியூரப்பா ஆட்சிக்கு வந்தார். இதை தொடர்ந்து தற்போது லட்சுமன் சங்கப்பா துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து பாஜகவுக்குள்ளேயே பல எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில் கர்நாடகா மாநில சட்டத்துறை அமைச்சர் மதுசாமி, ஆபாசப் படம் பார்ப்பது ஒன்றும் தேச விரோத செயல் அல்ல எனவும், அதன் காரணமாகவே ஒருவர் அமைச்சராக கூடாது என வாடிடுவதில் அர்த்தம் இல்லை என கூறியுள்ளார். மேலும் லட்சுமன் யாரையும் ஏமாற்றவில்லை, ஆதலால் இது பற்றிய விவாதம் தேவையற்றது என கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் சட்ட அமைச்சரின் இந்த கருத்தால் பாஜகவில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.