புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2017 (01:08 IST)

மகேஷ்பூபதியின் டவல் எதற்கு உதவுகிறது தெரியுமா? ஒரு நடிகையின் கிண்டல் பதிவு

விம்பிள்டன், யூஎஸ் ஓபன், ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்ச் ஓபன் போன்ற டென்னிஸ் போட்டிகளில் விளையாடி பல்வேறு பட்டங்களை பெற்றவர் மகேஷ்பூபதி. இவருடைய முன்னாள் மனைவியும் பிரபல நடிகையும் முன்னாள் உலக அழகியுமான லாரா தத்தா தற்போது மும்பையில் வாழ்ந்து வருகிறார்.



 
 
இந்த நிலையில் மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில் லாரா தத்தாவின் வீட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இந்த நிலையில் வீட்டின் உள்ளே வரும் தண்ணீரை நிறுத்த மகேஷ்பூபதி பயன்படுத்திய டென்னிஸ் டவல்களை வைத்து அடைத்து வருகிறாராம்
 
இதுவரை 12 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை வென்ற மகேஷ்பூபதியின் டவல் இதற்குத்தான் உதவுகிறது என்று நடிகை லாரா தத்தா புகைப்படத்துடன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். லாராவின் கிண்டலை இந்த வெள்ள வருத்தத்திலும் பலர் ரசித்து வருகின்றனர்.