1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 30 மார்ச் 2018 (09:38 IST)

ஊழல் வழக்கில் சிக்கிய லாலு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

ராஞ்சி மருத்துவமனையில்  நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த லாலு பிரசாத் யாதவ், தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பீகார் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மீது சுமத்தப்பட்ட 3 மாட்டுத்தீவன வழக்குகளில் ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டு அவருக்கு 13.5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 4வது மாட்டுத்தீவன ஊழல் வழக்கிலும் லாலு குற்றவாளியென அறிவிக்கப்பட்டு  14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 
இந்நிலையில் கடந்த வாரம் லாலுவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் ராஞ்சியில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.  லாலுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு நோய்த் தொற்றும், அதிகப்படியான சர்க்கரையும் உள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

சிகிச்சை பெற்றுவரும் லாலுவை மத்திய அமைச்சர் உபேந்திரா குஷ்வாஹா, எய்ம்ஸ் மருத்துவமனை சென்று நேற்று நலம் விசாரித்தார்.