1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 25 மார்ச் 2018 (10:41 IST)

உடல் நலக் குறைவால் அதிமுக அவைத் தலைவர் மனுசூதனன் மருத்துவமனையில் அனுமதி

அதிமுக சார்பில் ஆர்.கே நகரில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க. அவைத்தலைவர் மனுசூதனன் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அதிமுகவில் அவைத்தலைவராக இருந்து வருபவர் மதுசூதனன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியின் மூத்த நபர்களுக்கு பல்வேறு யோசனைகளை வழங்கி வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.
 
மதுசூதனன் ஆர்.கே நகர் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சென்னையில் வசித்துவரும் மதுசூதனனுக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மதுசூதனன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.