1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 18 அக்டோபர் 2021 (15:01 IST)

லக்கிம்பூர் கேரி வன்முறையைக் கண்டித்து ரயில் மறியல்

லக்கிம்பூரில் சமீபத்தில் நடந்த வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

 
இதனால், பல இடங்களில் ரயில் போக்குவரத்தும் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. லக்கீம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வாகனம் மோதிய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கேட்டும், சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆஷிஷ் மிஸ்ராவின் தந்தையும் இந்திய உள்துறை இணை அமைச்சருமான அஜய் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை ரயில் மறியலில் ஈடுபடுமாறு விவசாயிகளுக்கு ஐக்கிய கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்தின்போது அவசரகால சேவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றும் ரயில் மறியலில் மட்டுமே தங்களுடைய அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட வேண்டும் என்று ஐக்கிய கிசான் மோர்ச்சா கேட்டுக் கொண்டுள்ளது.