வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 13 டிசம்பர் 2023 (08:02 IST)

மாநகராட்சி பெண் ஆணையருக்கு 1 மாதம் சிறை தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மாநகராட்சி பெண் ஆணையருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து தனியார் பள்ளியை நடத்தி வந்ததாக ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அந்த இடத்தின் வாரிசுதாரருக்கு 25 லட்சம் பணத்தை பள்ளி நிர்வாகத்திடம் வசூலித்து வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால் இது குறித்து மாநகராட்சி ஆணையர் கீர்த்தி என்பவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்பட்டதை அடுத்து மாநகராட்சி ஆணையருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 2000 அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜனவரி 2ஆம் தேதிக்குள் அவர் தானாகவே முன்வந்து சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva