செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (18:59 IST)

திறமையற்ற பஞ்சாப் அரசை வரலாறு மன்னிக்காது: மத்திய அமைச்சர் எல்.முருகன்

திறமையற்ற பஞ்சாப் அரசை வரலாறு மன்னிக்காது என மத்திய அமைச்சர்கள் முருகன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 
 
பஞ்சாப் மாநிலத்தில் நலத்திட்ட தொடக்க விழாவிற்கு கலந்து கொள்ள சென்ற பிரதமர் மோடி விவசாயிகளின் போராட்டம் காரணமாக விழாவில் ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார் 
இந்த நிலையில் இதுகுறித்து பல்வேறு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மத்திய அமைச்சர் முருகன் அவர்களும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் 
பஞ்சாபில் தலைமையேற்ற காங்கிரஸ் அரசு நடைபெற்று வருவதாகவும் அந்த அரசை வரலாறு மன்னிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமரின் வருகையை சீர்குலைத்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் கூறுகிறார்