திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (16:12 IST)

நான் உயிரோடு ஊர் திரும்பியதாக முதல்வரிடம் சொல்லுங்கள்! – கடுப்பான பிரதமர் மோடி!

பஞ்சாபில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் மோடி பாதுகாப்பு குறைவால் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.42,750 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று பஞ்சாப் சென்றார். வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை ரத்து செய்து காரில் பெரோஸ்பூர் நோக்கி சென்றார்.

அப்போது நெடுஞ்சாலை ஒன்றில் பிரதமரின் கார் சென்று கொண்டிருந்தபோது போராட்டக்காரர்கள் சாலையை வழிமறித்ததால் 20 நிமிடங்கள் பிரதமர் மோடியின் கார் மேம்பாலத்தில் நின்றது. பின்னர் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக பிரதமரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

அதை தொடர்ந்து மீண்டும் பத்திண்டா விமான நிலையத்திற்கே சென்ற பிரதமர் மோடி ”நான் விமான நிலையத்திற்கு உயிருடன் திரும்பியதற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன் என சொல்லிவிடுங்கள்” என அங்கிருந்த அதிகாரிகளிடம் வெறுப்பாக சொல்லி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.