1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (10:23 IST)

விரும்பியவரை இஸ்லாம் பெண்கள் திருமணம் செய்யலாம்: பஞ்சாப் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திருமண வயதான பெண்கள் தாங்கள் விரும்பியவரை திருமணம் செய்து கொள்ளலாம் என பஞ்சாப் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பருவமெய்திய இஸ்லாமியப் பெண்ணுக்கு தான் விரும்பிய நபரை திருமணம் செய்து கொள்ளும் உரிமை இருக்கிறது என்றும் அவரது முடிவில் அப்பெண்ணின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தலையிட உரிமை இல்லை என்றும் பஞ்சாப் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
 
இஸ்லாமிய பெண்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஏற்பாடு செய்த ஒருவரைத்தான் திருமணம் செய்ய வேண்டுமென மதக் கோட்பாடுகளின்படி இருக்கும் நிலையில் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.