செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 4 ஜனவரி 2022 (09:44 IST)

ஒரே கல்லூரியில் 100 மாணவர்களுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்!

பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கல்லூரியில் 100 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்ததை அடுத்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா மருத்துவ கல்லூரியில் 100 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
ஒரே கல்லூரியில் 100 மாணவர்களுக்கு கொரோனா எப்படி என்பது குறித்து சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.