புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 21 மே 2018 (15:35 IST)

எங்கள் கூட்டணியில் குழப்பம் இல்லை: குமாரசாமி விளக்கம்!

கர்நாடகாவில் எடியூரப்பா பதவி விலகியதை தொடர்ந்து, குமாரசாமி முதல்வர் பதவி ஏற்பது உறுதியாகியுள்ளது. வருகிற புதன்கிழமை அவர் பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க்ப்படுகிறது. 
 
மேலும், மதசார்பற்ற ஜனத தள கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் வழங்கியுள்ளது. ஆனாலும், சில வருடங்கள் குமாரசாமியும், சில வருடங்கள் காங்கிரஸூம் ஆட்சி பொறுப்பில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குமாரசாமி அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் செய்தி வெளியாகியது. 
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கும் மஜத கட்சிக்கு இடையில் இருந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டதாக செய்தி வெளியானது. அதாவது, யாருக்கு அமைச்சரவையில் இடமளிப்பது என்று குழப்பம் ஏற்பட்டதாக செய்தி வெளியானது. 
 
ஆனால், இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக குமாரசாமி பேசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, கூட்டணியில் பிளவு என்று வந்த செய்தி எல்லாம் பொய். எதையும் நம்பி தொண்டர்கள் குழம்ப வேண்டாம். நாங்களும் காங்கிரஸ் கட்சியும் ஒற்றுமையாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.