திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 21 மே 2018 (12:34 IST)

அத்வானியின் நிலைதான் எடியூரப்பாவிற்கும்? தலைமை சூசகம்!

கர்நாடக தேர்தல் நடந்து முடிந்து பல குழப்பங்களுக்கு பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க முடியமால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 
 
104 இடங்களில் வெற்றி பெற்றும் 7 எம்எல்ஏக்களின் பலம் இல்லாததால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே பதவி விலக்கிக் கொண்டது. இது எடியூரப்பாவிற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும், கர்நாடகாவில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. இதன்  காரணமாக எடியூரப்பா கொஞ்சம் கொஞ்சமாக கட்சியில் இருந்து கழற்றிவிடப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் செய்திகளை கசிய விடுகின்றன. 
 
அதவாது, எடியூரப்பாவை கொஞ்சம் கொஞ்சமாக கட்சியைவிட்டு விலக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஸ்ரீராமுலு, ஆனந்த் குமார் ஹெக்டே உள்ளிட்ட தலைவர்களை மேலே கொண்டு வர முடிவு செய்து இருக்கிறார்களாம்.
 
கர்நாடகாவில் கிட்டத்தட்ட 20% வாக்குகளை லிங்காயத்துகள் பெற்றுள்ளனர். அவர்களின் வாக்குகளை கவரும், பாஜக முகம் எடியூரப்பா. இதனால், உடனடி நடவடிக்கைகள் சரிவராது என்றும், அத்வானியை ஒதுக்கியது போல, எடியூரப்பாவையும் கட்சியில் ஒன்றும் இல்லாமல் செய்ய திட்டமிட்டுள்ளனராம்.