திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 அக்டோபர் 2018 (17:31 IST)

குமரன் சில்க்ஸ் - ல் திடீர் ஐடி ரெய்டு - பீதியில் முதலாளி

சென்னை குமரன் சில்க்ஸ் துணிக்கடையில் திடீரென இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் படையெடுத்து ஆய்வு மேற்கொண்டனர். இதனால் அந்த கடையின் முதலாளி அதிர்ச்சியில் உறைந்துள்ளார். 
 
தியாகராய நகர் நாகேஸ்வர ராவ் சாலையில் உள்ள குமரன் சில்க்ஸ் துணிக்கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கடையின் ஆண்டு வருமானம் மற்றும் அதற்கான வரி உள்ளிட்ட முக்கிய ஆவண அம்சங்களை  10 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் களத்தில் இறங்கி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
 
சொத்தை மேற்கொண்ட அதிகாரிகள், இந்த சோதனை சந்தேகத்தின் பேரிலோ அல்லது புகாரின் அடிப்படையிலோ நடத்தப்படும் சோதனை அல்ல என்று தெரிவித்துள்ளனர். மேலும், வழக்கமான ஆவண சரிபார்ப்பு மட்டுமே என தெரிவித்த  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர்.