கற்புகரசியா நீ? மனைவியின் கற்பை சோதிக்க கணவன் செய்த கொடூர செயல்
மனைவியின் கற்பை சோதிக்க அவரது கையை கணவன் நெருப்பில் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். அவரது கணவரும் மாமியாரும் மிகப்பெரிய சந்ததேகப் பேர்வழிகள். எப்பொழுதும் அவர்கள் அந்த பெண்ணை டார்ச்சர் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் கொடூரத்தின் உச்சமாய் ஆந்த பெண்ணின் கணவன் நீ கற்புக்கரசி என்பதை நிரூபிக்க நான் சொல்வதை செய்ய வேண்டும் அதில் பாஸ் செய்துவிட்டால் நீ ஒழுக்கமானவள் என்பதை நம்புகிறேன் என கூறி அந்த பெண்ணின் கையை நெருப்பில் வைத்து கொடுமைபடுத்தியுள்ளான். நீண்ட நேரம் நெருப்பில் கை வைத்திருந்தால் தான் நீ ஒழுக்கமானவள் என நம்ப முடியும் எனவும் கூறியுள்ளான்.
நெருப்பில் கை வைத்த அந்த பெண் வலி தாங்கமுடியாமல் அலறியுள்ளார். அருகிலிருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனையடுத்து அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் அந்த பெண்ணின் கணவனையும் மாமியாரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.