வீடுகளில் மோதுவது போல வந்த ஹெலிகாப்டர்! ஓட்டம் பிடித்த பொதுமக்கள்!
கேரளாவில் கோட்டயம் பகுதியில் வீடுகளுக்கு தாழ்வாக ஹெலிகாப்டர் பறந்து வந்ததால் மக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் வானத்தில் தோன்றிய ஹெலிகாப்டர் ஒன்று மெல்ல கீழே தாழ பறக்க தொடங்கியுள்ளது. அங்கிருந்து வீடுகளுக்கு மிக நெருக்கமாக ஹெலிகாப்டர் பறந்ததால் சில வீடுகளின் மேற்கூரை, சீட்டுகள் காற்றில் பறந்தன.
இதனால் ஹெலிகாப்டர் மோத போவதாக நினைத்து மக்கள் அப்பகுதியை அலறியடித்து ஓடியுள்ளனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்து சேதங்களை பார்வையிட்ட போலீஸார் அந்த ஹெலிகாப்டர் விமானப்படைக்கு சொந்தமானதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.