பிரதமரை சந்தித்த கே.ஜி.எஃப், காந்தாரா பட ஹீரோக்கள்!
கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களான யாஷ் மற்றும் ரிஷப்ஷெட்டி இருவரும் பிரதமர் நரேந்திரமோடியை இன்று சந்தித்தனர்.
கர்நாடக மாநிலத்தில் முதலவர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
இம்மாநில தலை நகர் பெங்களூரில் எலங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச விமான கண்காட்சி நடந்து வருகிறது.
தற்போதது, 14 வது சர்வதேச விமான கண்காட்சி எலங்கா விமானப்படை தளத்தில் இன்று முதல் தொடங்கியுள்ளது.
பிரதமர் மோடி இன்று காலையில், இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அதில், இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏரோ இந்தியா நிகழ்ச்சியானது சிறந்த உதாரணமாக உள்ளது என்றூ தெரிவித்தார்.
இந்த நிலையில், பெங்களூரில் பிரதமர் மோடியை, ஜேஜிஎஃப் யஷ், காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டி, மற்றும் இயக்குனர்கள், மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரும் சந்தித்தனர். இதுகுறித்த புகைப்பரங்கள் இணையதளத்தில் பரவலாகி வருகிறது.