1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 5 ஜூன் 2019 (17:46 IST)

ஃபேஸ்புக் நிறுவனத்தையே அசர வைத்த கேரளா மாணவன்

சமீப காலத்தில் வாட்ஸ் அப் தகவல்களை அதன் பயனாளரின் அனுமதியின்றி திருடுவது, அழிப்பது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்தது. இதை எப்படி தடுப்பது என தெரியாமல் விழிப்பிதுங்கிய வாட்ஸப் நிறுவனத்தினர் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்ய சொல்லி அறிவுறுத்தினர். ஆனால் அதற்கு பிறகும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. தகவல்கள் திருடப்படுவது தொடர்ந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில் கேராளாவில் முதல் வருடம் இஞ்சீனியரிங் படிக்கும் அனந்தகிருஷ்ணன் என்ற மாணவர் தகவல் திருடுபோவதற்கு காரணமான காரணத்தை கண்டறிந்து சொல்லி ஃபேஸ்புக்கையே வியக்க வைத்திருக்கிறார். ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஆப்தான் வாட்ஸ் அப்.

தொழில்நுட்பத்தில் உள்ள கோளாறுகள்தான் காரணம் என்றாலும் அது என்னவென்பதை அதை உருவாக்கிய ஃபேஸ்புக் நிறுவனமே கண்டுபிடிக்க முடியாமல் தவித்தது. அப்போது அவர்களது தொழில்நுட்பத்தில் தகவல் திருட்டுக்கு வழி செய்து தரும் இரண்டு முக்கிய எரர்களை கண்டறிந்து அவற்றை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொல்லியிருக்கிறார் அனந்தகிருஷ்ணன்.

இவ்வளவு பெரிய பிரச்சினையை கண்டறிந்து கொடுத்த அவரது இந்த அறிவார்ந்த செயலை பாராட்டிய ஃபேஸ்புக் நிறுவனம் அவருக்கு சன்மானமாக 500 டாலர்கள் (இந்திய மதிப்பில் 34000) கொடுத்து கௌரவித்துள்ளது.

அனந்தகிருஷ்ணன் கேரளா போலீஸின் பிரிவான் கேரளா சைபர்ட்ரோம்-ல் இணைந்து ஹேக்கிங் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.