புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 அக்டோபர் 2021 (11:58 IST)

யூட்யூபை பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்த மாணவி! – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

கேரளாவில் கர்ப்பம் ஆன மாணவி ஒருவர் வீட்டுக்கு தெரியாமல் தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் மலப்புரம் மாவட்டம் கூட்டக்கல் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கும், மாணவி வீட்டிற்கு அருகே உள்ள 21 வயது வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால் அதை வெளிகாட்டிக் கொள்ளாமலே இருந்து வந்துள்ளார். நிறைமாதம் அடைந்த நிலையில் வலி காணவே வீட்டு மாடியில் உள்ள அறைக்கு சென்று அங்கு யூட்யூபை பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொண்டுள்ளார்.

இதில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதை வீட்டில் உள்ளோருக்கு தெரியாமல் அந்த அறையில் மறைத்து வைத்து மூன்று நாட்களாக அடிக்கடி சென்று கவனித்து வந்துள்ளார். குழந்தை அழும் சத்தம் கேட்டு சந்தேகித்த மாணவியின் பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் மாணவி உண்மையை சொல்ல அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் சம்பந்தபட்ட இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.