புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 அக்டோபர் 2021 (10:14 IST)

முல்லை பெரியாறு குறித்து பீதி கிளப்பினால் நடவடிக்கை! – முதலமைச்சர் எச்சரிக்கை!

முல்லை பெரியாறு அணை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் எச்சரித்துள்ளார்.

தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளில் கனமழை பெய்துள்ள நிலையில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் அணையில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் முல்லை பெரியாறு குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதை கண்டித்துள்ள பினராயி விஜயன், அவ்வாறாக தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.