கண்ணீர் மல்க ஐயப்பனை வழிபட்ட கேரள ஐஜி...என்ன காரணம்?
சபரிமலை போராட்டத்தின் போது, சிறப்பாக செயல்பட்ட ஐஜி ஸ்ரீஜித், கண்ணீர் மல்க ஐயப்பனை வழிபட்டார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கிய நிலையில் பெண்கள் ஒருசிலர் கடந்த சில நாட்களாக சபரிமலைக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர்.
கடந்த 19 ந் தேதி வெட்டி பந்தாவிற்காக கோவிலுக்குள் செல்ல முயற்சித்த பாத்திமா உள்ளிட்ட சில பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் ஐஜி ஸ்ரீஜித் கோவிலுக்குள் செல்ல முயற்சித்த பெண்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கி, அவர்களை கோவிலுக்குள் அழைத்து செல்ல முயற்சித்தார். கடும் எதிர்ப்பு கிளம்பவே அவர்கள் திரும்ப அனுப்பப்பட்டார்கள்.
ஐஜி ஸ்ரீஜித்திற்கு பலர் கண்டனங்களை தெரிவித்தாலும், அவர் நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றுவதாக அதிரடியாக தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று கோவில் நடை திறந்த போது, மஃப்டியில் வந்த ஐஜி ஸ்ரீஜித், மனமுருக ஐயப்பனை தரிசித்தார். கண்ணீர் மல்க அவர் சாமியை கையெடுத்து கும்பிட்டார். இதுகுறித்து பேசிய அவர், தான் தற்பொழுது போலீஸாக வரவில்லை என்றும் சாதாரண பக்தராக வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.