கொரோனாவால் இறந்தவர் உடலை வீட்டுக்கு கொண்டு செல்லலாம்! – கேரளா முதல்வர் அறிவிப்பு!
கேரளாவில் கொரோனாவால் இறந்தவர்கள் உடலை வீட்டுக்கு எடுத்து சென்று இறுதி காரியங்கள் செய்ய முதல்வர் பினராயி விஜயன் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனாவால் பலர் உயிரிழந்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனாவால் இறந்தவர்கள் உடல் உறவினர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக அடக்கமோ அல்லது தகனமோ செய்யப்படுகிறது. மற்றபடி கொரோனாவால் இறந்தவர்கள் உடல்கள் பொதுவாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை.
இந்நிலையில் தற்போது புதிய உத்தரவை வெளியிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் “கொரோனாவால் இறந்தவர்கள் உடலை 1 மணி நேரம் வீட்டிற்கு எடுத்து சென்று அஞ்சலி செலுத்தலாம்” என கூறியுள்ளார்.