செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 20 டிசம்பர் 2017 (05:46 IST)

தமிழக மீனவர்களை கண்டுபிடிக்க உதவும் கேரள அரசு! என்ன செய்கிறது தமிழக அரசு?

சமீபத்தில் ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயுள்ளதால் அவர்களை கண்டுபிடிக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முயற்சிகளில் திருப்தி இல்லை என்று குமரி மாவட்ட மீனவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக மீனவர்கள்  கேரள மீனவ பிரதிநிதிகளுடன் கலந்து பேசி தாங்களாகவே ஆழ்கடலுக்குள் சென்று காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

தமிழக, கேரள மீனவர்கள் நேற்று 26 விசைப்படகுகளில் காணாமல் போன மீனவர்களை தேடி ஆழ்கடலுக்குள் சென்றுள்ளனர். இந்த 26 விசைப்படகுகளுக்கும் தேவையான டீசல்கள் மற்றும் அடிப்படை பொருட்களை கேரள அரசு இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. ஆனால் தமிழக அரசிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லை என்று குமரி மாவட்ட மீனவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.