ஐஸ் க்ரீமில் எலி மருத்து; தெரியாமல் தின்ற மகன், சகோதரி! – கேரளாவில் அதிர்ச்சி!
கேரளாவில் பெண் ஒருவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் அது தெரியாமல் அதை சாப்பிட்ட பெண்ணின் மகன், சகோதரி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் 25 வயதான வர்ஷா. கடந்த சில மாதங்களாக தீராத மன உளைச்சலில் இருந்த இவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். இதற்காக ஐஸ் க்ரீமில் எலி மருந்து கலந்து சாப்பிட்டுள்ளார். பாதி சாப்பிட்டு விட்டு மீதி ஐஸ்க்ரீமை சமையலறையிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளார்.
அதில் உள்ள ஆபத்து தெரியாமல் வர்ஷாவின் மகனும், சகோதரியும் அதை சாப்பிட்டுள்ளனர். அதன்பிறகு வேறு சில உணவுகளையும் சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் திடீரென இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவருமே உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் வ்ழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் வர்ஷா எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது. ஆனால் அவர் குறைந்த அளவிலேயே அதை எடுத்துக் கொண்டதால் அவருக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.