திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 13 அக்டோபர் 2022 (18:13 IST)

நரபலி கொடுத்தவர்களை சாப்பிடவில்லை: கைதான பெண் மறுப்பு!

narapali
நரபலி கொடுத்தவர்களை சாப்பிடவில்லை: கைதான பெண் மறுப்பு!
கேரளாவில் 2 தமிழ் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாகவும் நரபலி கொடுக்கப்பட்ட பெண்ணின் உடலை வெட்டி தம்பதிகள் சாப்பிட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் நரபலி கொடுக்கப்பட்ட உடலை நாங்கள் சாப்பிட வில்லை என கைதான பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். 
 
கேரளாவில் பத்தனம்திட்டா என்ற பகுதியில் லைலா மற்றும் அவரது கணவர் பகவத் சிங் ஆகிய இருவரும் இரண்டு தமிழ் பெண்களை நரபலி கொடுத்து அவர்களை சாப்பிட்டதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் கைதான லைலா செய்தியாளர்களிடம் கூறியபோது நரபலி கொடுக்கப்பட்ட பெண்களை நாங்கள் சாப்பிட வில்லை என்றும் அவ்வாறு வெளியான தகவல் தவறானது என்றும் தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட தம்பதியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் நீதிமன்ற காவலில் வைக்க அவர்கள் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன மட்டும்
 
Edited by Siva