கலால் கொள்கை வழக்கு: கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!
டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கவிதாவின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி கலால் கொள்கை வழக்கில் கடந்த மாதம் 15 ஆம் தேதி முன்னாள் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து இடைக்கால ஜாமீன் கோரி கவிதா புதிய மனுவை தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவில் தனது கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்ற வேண்டும் என்றும் அதனால் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இடைக்கால ஜாமின் வழங்குவதற்கான சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் கவிதாவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி உத்தரவிட்டார்
ஏற்கனவே கவிதாவின் ஜாமின் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இடைக்கால ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva