அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை!
கர்நாடகாவில் 18 மணி நேரத்தில் 25 கி.மீ தூரத்திற்கு சாலை அமைத்தது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயப்புரா மாவட்டத்தில் இருந்து மகராஷ்டிராவிம் சோலாப்பூர் வரை 110 கி.மீட்டருக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த சாலை அமைக்கும் பணியை கையில் எடுத்துள்ள நிறுவனம் 25 கிலோ மீட்டர் தூர சாலையை 18 மணி நேரத்திற்குள்ளாக அமைத்துள்ளது. இதற்காக சுமார் 500 தொழிலாளர்கள் ஒரே சமயத்தில் பணிபுரிந்துள்ளனர்.
இந்த சாதனை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த சாதனையையும், இதை சாத்தியமாக்கிய தொழிலாளர்களையும் பாராட்டியுள்ளார்.