5 மாநிலங்கள், 824 தொகுதிகள்; 2.7 லட்சம் வாக்குச்சாவடிகள்! – பரபரக்கும் மாநில தேர்தல்!

Prasanth Karthick| Last Updated: வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (17:09 IST)
தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆட்சி காலம் முடியும் நிலையில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில மற்றும் தேசிய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

இந்நிலையில் 5 மாநிலங்களிலும் தமிழகத்தில் 234, புதுச்சேரியில் 30, கேரளாவில் 140, மேற்கு வங்கத்தில் 294 மற்றும் அசாமில் 126 தொகுதிகள் என மொத்தம் 824 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 5 மாநிலங்களில் 2.7 லட்சம் வாக்குச்சாவடிகள் மூலமாக 18.68 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர் என சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா காலம் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும், பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்த உள்ளதாகவும், தற்போது தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :