ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 செப்டம்பர் 2021 (20:19 IST)

கர்நாடகாவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு?

கர்நாடக மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 673  என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 1,074 என்றும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
மேலும் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 16,241 என்றும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த என்ணிக்கை 29,62,408 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 37,517 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கர்நாடக மாநில சுகாதாரத்துறை எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை காரணமாக மாநிலத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் குறைந்து வருகிறது என்பதும் தமிழகத்தை விட அம்மாநிலத்தில் கொரோனா  பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது