வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Updated : திங்கள், 13 செப்டம்பர் 2021 (17:51 IST)

டிராவிட் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக வருவாரா? கங்குலி கருத்து!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிய உள்ளது.

இந்தியாவின் பி டீம் என சொல்லப்பட்ட ஷிகார் தவான் தலைமையிலான அணி இலங்கையில் ருத்ர தாண்டவம் ஆடி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தது முக்கியக் காரணம் என சொல்லப்படுகிறது. அவரை இலங்கைக்கு அனுப்பியதற்குக் காரணமே அவரை அடுத்த தலைமைப் பயிற்சியாளராக ஆக்கவேண்டும் என்பதற்காகதான் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது அதுபற்றி பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி ‘ டிராவிட்டுக்கு இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை என்று சொல்லியுள்ளார். ஆனால் இன்னும் நாங்கள் அவரிடம் மனம் விட்டு பேசவில்லை. அதற்கான நேரம் வரும் போது முடிவெடுப்போம்’ எனக் கூறியுள்ளார்.