1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 நவம்பர் 2022 (09:17 IST)

250 பெண்களுக்கு 14 ஆயிரம் ஆண்கள் போட்டி? – வரன் நிகழ்ச்சியில் பரபரப்பு!

கர்நாடகாவில் நடந்த திருமண வரன் பார்க்கும் நிகழ்ச்சியில் 14 ஆயிரம் ஆண்கள் குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாள்தோறும் திருமணம் என்பது இளைஞர்களுக்கு எட்டாக்கனியாக மாறி வரும் நிலையில் திருமண வரன் நிகழ்ச்சிகள் அதிகரித்துள்ளன. பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் திருமண வரன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இளைஞர்களும், பெண்களும் கலந்து கொள்கின்றனர். அவ்வாறாக கர்நாடகாவில் நடந்த திருமண வரன் நிகழ்ச்சி ட்ரெண்டாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஆதிசுஞ்சனகிரி தொகுதியில் திருமண வரன் பார்க்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இதில் திருமணமாகாத இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுமார் 14 ஆயிரம் ஆண்கள் ஜாதகத்துடன் பதிவு செய்துள்ளனர்.


ஆனால் 250 பெண்கள்தான் ஜாதகத்தை இந்த வரன் நிகழ்ச்சிக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் திருமண வரன் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு பதிவு செய்த அனைத்து இளைஞர்களும் வந்ததால் அப்பகுதி பெரும் கூட்டமாக காணப்பட்டுள்ளது. 250 பெண்களே பதிவு செய்திருந்ததால் வரன் நிகழ்ச்சி நடத்தியவர்கள் என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி போனதாகவும், பின்னர் இளைஞர்களிடம் பேசி அனுப்பி வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K