Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தகவல்..!

Written By Mahendran
Updated: புதன், 10 மே 2023 (19:05 IST)
கர்நாடக மாநிலத்தில் இன்று சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 
 
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக தான் அதிக இடத்தில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. 
 
பாஜக 94 முதல் 117 இடங்கள் வரை வெல்லும் என்றும் காங்கிரஸ் 91 முதல் 106 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 14 முதல் 24 தொகுதிகளில் வெல்லும் என்றும் மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் இரண்டு இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
கருத்துக்கணிப்பை பார்க்கும் போது காங்கிரஸ் மற்றும் பாஜக கிட்டத்தட்ட சம இடங்களில் தான் வெல்லும் என்றும் பத்து தொகுதிகள்தான் இரு கட்சிகளுக்கு இடையே வேறுபாடு இருக்கும் என்பது தெரிய வருகிறது.
 
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

முக ஸ்டாலினுக்கு Z பிரிவு பாதுகாப்பு வாபஸ்!.. தமிழக அரசு அதிரடி...

பட்டம் விடும்போது காற்றில் பறந்த இளைஞர்!.. ஒரே சிரிப்பு!.. வீடியோ பாருங்க!...

நேபாள வெள்ளம் எதிரொலி!.. இமயமலை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு!...

ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க!.. முடிவை மாற்றிய நேபாள அரசு!...

நேபாள வெள்ளம்.. பால்கனியில் நின்றவர்கள் தப்பித்தார்களா?!.. நடந்தது என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments