வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 10 மே 2023 (14:50 IST)

பிறந்த நாளையொட்டி ரசிகர்களுக்கு பாதாம், பிஸ்தா வழங்கிய நமீதா!

தமிழ் சினிமாவில் ஏய், இங்கிலீஸ்காரன், சாணக்யா, பம்பர கண்னாலே, யானை, கோவை பிரதர்ஸ், தகப்பன்சாமி, பில்லா, அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நமீதா.

கடந்த 2017 ஆம் ஆண்டு பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டார்.  பின்னர் சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் அரசியலில் கவனம் செலுத்தினார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக எல்.முருகன் அவரை நியமித்தார்.

இன்று 42 வது பிறந்த நாள் காணும் நடிகை நமீதா,  சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் 108 தாமரை பூக்களை வைத்து சிறப்பு பூஜை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’இந்தப் பிறந்த நாள் எனக்கு சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் என் குழந்தையயுடன் கொண்டாடுகிறேன். கர்நாடகாவில் பெங்களூரில் நான் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேன். கர்நாடகாவில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் ’’ என்று கூறினார்.

மேலும் தன் பிறந்த நாளையொட்டி, கோயிலில்  ரசிகர்களுக்கு பாதாம், பிஸ்தா வழங்கினார்.