சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்: இடைத்தேர்தல் தேதியை மாற்றிய தேர்தல் ஆணையம்
கர்நாடக மாநிலத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள் குறித்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேர்தல் டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
17 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கின் விசாரணை முடிவடையாததால் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா? என தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட தேர்தல் ஆணையம், கர்நாடகா இடைத்தேர்தலை டிசம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிவித்தது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் மாதம் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
கர்நாடக மாநிலத்தில் டிசம்பர் 5 ஆம் தேதிக்கு நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேதி மாற்றத்தால் கர்நாடக அரசியல் கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன