கன்னட நடிகர் குத்திக் கொலை..! இதுதான் காரணமா? – அதிர்ச்சி தகவல்!
கன்னட நடிகர் நேற்றிரவு மர்ம நபர்களால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில் போலீஸார் விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் மாத்தூரை சேர்ந்தவர் சதீஷ் வஜ்ரா. கன்னட சினிமாவில் பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ள இவர், லகோரி என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
பெங்களூர் ஆர்.ஆர் நகர் பகுதியில் வசித்து வந்த சதீஷின் வீட்டிற்கு நேற்று புகுந்த மர்ம நபர்கள் சதீஷை கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சதீஷை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், கடந்த சில காலம் முன்னதாக சதீஷ் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. வீட்டு பிரச்சினையால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் கோபத்தில் இருந்த பெண் வீட்டார் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.