சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 7 ஜூன் 2024 (09:00 IST)

பஞ்சாபில் பயங்கரவாதத்தை எவ்வாறு கையாள்வது? பெண் காவலர் அடித்தது குறித்து கங்கனா ரனாவத்..!

சண்டிகர் விமான நிலையத்தில் நேற்று நடிகை   கங்கனா ரனாவத்தை பெண் காவலர் ஒருவர் தாக்கிய நிலையில் இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர் பஞ்சாபில் பயங்கரவாதத்தை எவ்வாறு கையாள்வது என்று தெரியவில்லை என பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சண்டிகர் விமான நிலையத்தில் இன்று நடந்த பாதுகாப்பு சோதனைக்கு பிறகு நான் கிளம்பிய போது பெண் காவலர் ஒருவர் என் முகத்தில் அறைந்தார். ஏன் அவ்வாறு செய்தார் என்று நான் அவரிடம் கேட்டபோது விவசாயிகள் போராட்டங்களை அவர் ஆதரிப்பதாக கூறினார்.

ஆனால் எனது கவலை என்னவென்றால் பஞ்சாபில் பயங்கரவாதத்தை எப்படி கையாள்வது என்பதுதான் என்று தெரிவித்துள்ளார். நடிகை கங்கனாவின் இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் தன்னை தாக்கிய பெண்  காவலர் குறித்து சிஐஎஸ்எப் இயக்குனரிடம்   கங்கனா ரனாவத் புகார் அளித்ததை அடுத்து பெண் காவலர் குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva