செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 மார்ச் 2021 (13:04 IST)

பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்லக்கூடாது என நான் போட்டியிடுகிறேன்…. கமல்ஹாசன் ஆவேசம்!

நான் பாஜகவின் பிடீம் இல்லை என்றும் காந்திக்கு மட்டுமே பி டீம் என்றும் கூறியுள்ளார் கமல்ஹாசன்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர். அதன் ஒரு கட்டமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் ‘ நான் ஹெலிகாப்டரில் செல்வதற்கு பாஜக காசு தருவதாக சொல்கிறார்கள்.  ஜிஎஸ்டி வரி விதித்தது முதல் நான் மத்திய அரசை விமர்சித்து வருகிறேன். அவர்களுக்கு ஒரு எம் எல் ஏ கூட கிடைக்கக் கூடாது என்பதற்காகதான் நான் தேடிப்பிடித்து ஒரு தொகுதியில் போட்டியிடுகிறேன். அப்படி இருந்தும் எனக்கு எப்படி அவர்கள் பணம் தருவார்கள்’ எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் தன்னை பாஜகவின் பி டீ ம் என திமுகதான் சொல்லி வருகிறது. நான் காந்திக்கு மட்டுமெ பி டீம் எனக் கூறியுள்ளார்.