1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 26 அக்டோபர் 2024 (11:15 IST)

ஜார்க்கண்ட் தேர்தல்: தல தோனிக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த முக்கிய பொறுப்பு..!

ஜார்கண்ட் மாநில தேர்தல் நவம்பர் 13, 20 ஆகிய இரண்டு கட்டங்களில் நடைபெற இருப்பதால், இந்த தேர்தலுக்கான பிராண்ட் அம்பாசிடராக தல தோனியை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தலைமை தேர்தல் அதிகாரி உறுதி செய்துள்ளார்.
 
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி ரவிக்குமார், மகேந்திர சிங் தோனி தனது புகைப்படத்தை பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். மற்ற விவரங்கள் குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். 
 
வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் பணியை தோனி செய்வார்; எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை தோனி ஏற்படுத்துவார். அதிக அளவில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை மக்களிடம் தூண்டுவதற்காக தோனியின் பெயர் பயன்படுத்தப்படும். இது நிச்சயம் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது என்று கூறியுள்ளார்.
 
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பதும், நவம்பர் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran