வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 28 ஏப்ரல் 2018 (14:28 IST)

பிறந்த குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டிய டாக்டர்: எதற்காக தெரியுமா?

ஜார்கண்ட் மாநிலத்தில் டாக்டர் ஒருவர் ஆண் குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டி கொன்றுள்ளார்.
 
ஜார்கண்ட் மாநிலத்தில் சத்ரா என்ற பகுதியில் வசித்து வருபவர் அனில் பான்டா. இவரது மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ளதால் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
 
அந்த தனியார் மருத்துவமனையின் டாக்டர் அருண்குமார், பான்டாவின் மனைவியின் மேல்சிகிச்சைக்காக மற்றோரு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார். அதன்படி அவரும் வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
 
அங்கே அவரது மனைவிக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டறியும் ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்கேன் முடிவில் பான்டாவின் மனைவிக்கு பெண் குழந்தை பிறக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அவரது மனைவிக்கு ஸ்கேன் முடிவிற்கு மாறாக ஆண் குழந்தை பிறந்தது. இதனால் கோபமடைந்த டாக்டர் அந்த ஆண் குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டி கொன்றுள்ளார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக அருண்குமார், அனுஜ் குமார் ஆகிய டாக்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.