எம்பிபிஎஸ் பட்டத்தை சேர்த்து கொள்ள விருப்பமில்லை- சாய்பல்லவி பேட்டி

s
Last Modified திங்கள், 26 மார்ச் 2018 (19:14 IST)
சினிமாவில் நடித்து கொண்டே டாக்டர் வேலை பார்பதில் உடன்பாடு இல்லை அதனால் எம்.பி.பி.எஸ் படத்தை என் பெயரின் பின் சேர்த்து கொள்ளவில்லை என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

 
 
பிரேமம்’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான சாய் பல்லவி, அந்த ஒரு படத்திலேயே மலர் டீச்சராக எல்லோர் மனதிலும் இடம்பிடித்து விட்டார். அவர் தெலுங்கில் அறிமுகமான ‘பிடா’ படமும் சூப்பர் ஹிட். தற்போது தமிழில் விஜய் இயக்கும் ‘கரு’ படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். அத்துடன், தனுஷ் ஜோடியாக ‘மாரி 2’ படத்திலும், சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே படத்திலும் நடிக்கிறார்.
 
இந்த சினிமா பயணம் குறித்து அவர் அளித்த பேட்டியில், கங்கன ரனாவத்திற்கு தோழியாக தாம்தூம் படத்தில் நடித்திருந்தேன். அதன் பிறகு என் தந்தை சினிமா நிரந்தர தொழில் இல்லை. கதாநாயகிகள் ஆறு வருடங்கள் மட்டுமே நிலைத்து இருக்க முடியும் என்று கூறி டாக்டர் படிப்பதற்காக ஜார்ஜியாவுக்கு அனுப்பி வைத்தார்.
 
அப்போது நான் படித்து கொண்டிருக்கும் போது பிரேமம் படம் வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நடித்தேன், அது மிக பெரிய வெற்றியை எனக்கு தந்தது. அதனால் நான் முழுநேர கதாநாயகி ஆகிவிட்டேன். சினிமாவில் நடித்து கொண்டே டாக்டர் வேலை பார்பதில் எனக்கு உடன்பாடு இல்லை அதனால் என் பெயரின் பின் எம்.பி.பி.எஸ் பட்டத்தை சேர்த்து கொள்ளவில்லை என கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :